தொழிலதிபரிடம் நகை, ரூ.20,000 கொள்ளை

வடசென்னை அருகே மசாஜ் செய்வதாக வீட்டிற்கு அழைத்து தொழிலதிபரிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த 2 பெண்கள் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-11-30 08:48 GMT
சென்னை மாதவரத்தை சேர்ந்த நிர்மலா, கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மசாஜ் செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு, தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்த அந்த பெண் மது விருந்து அளித்துள்ளார். போதையில் வீட்டிற்கு சென்று உறங்கிய கிருஷ்ணமூர்த்தி, அதிகாலையில் எழுந்து பார்த்த போது 2 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் இல்லாததை கவனித்துள்ளார். உடனடியாக நிர்மலாவுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மறுத்துள்ளார். இதனை அடுத்து, மாதவரம் போலீசாரிடம் தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பெண்கள் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்