தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : தமிழக காவல்துறைக்கு எதிராக சிபிஐ வழக்கு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், தமிழக காவல்துறைக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.
* இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகளே சட்டத்தை மீறி செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.