ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு தடை கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு செலவில் ஜெயலலிதா நினைவு இல்லம், அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-26 08:26 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, 20 கோடி ரூபாய் மதிப்பில் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்