கூடுதலாக 7.5 லட்சம் மருந்துகள் வாங்க இன்று உத்தரவு : பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல்

பன்றி காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ஏழரை லட்சம் மருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-22 03:27 GMT
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.  கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில் பன்றி காய்ச்சலுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, பன்றி காய்ச்சலுக்கு, தமிழகம் முழுவதும் 20 லட்சம் மருந்துகள் இருப்பு உள்ளதாக தெரிவித்தார். புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள 8000 கடைகளில் தேவையான அளவிற்கு மருந்துகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மருந்துகளை வீடுகளுக்கே, வரவழைக்க,               www.drugscontrol.tn.gov.in எனும்     இணைய    தள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்