"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சர்க்கரை நோயாளிகள் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோயின் தாக்கம் மற்றும் அதன் பக்க விளைவுகள் போன்றவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகள் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
சரியான உடற்பயிற்சி, முறையான உணவு வகைகள், வாழ்வியல் முறைகள் போன்றவற்றை கடைபிடிக்காததே இன்று இளம் வயதிலேயே சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக கோவையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே ஒவ்வொருவரும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் நீரழிவு நோயை போக்குவதற்கு கருஞ்சீரகத்தை, வெந்தயத்தை உட்கொண்டால் போதும் என தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், உணவு முறை, உடற்பயிற்சி, மருந்து ஆகியவற்றிற்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதில் சமஅளவில் முக்கியத்துவம் உள்ளததாக நாகர்கோவிலை சேர்ந்த சித்த மருத்துவர் செல்வின் இன்னோசென்ட் தாஸ் தெரிவித்தார்.