"கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - நாகை மாவட்ட ஆட்சியர்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

Update: 2018-11-14 02:50 GMT
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம்,  கல்லாறு உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். 

பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும், அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்கி இருக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.  ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்களை மீட்கவும், அருகிலுள்ள துறைமுகங்களுக்கு அவர்களை கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்னதாக, கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்