கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-13 07:35 GMT
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி,சென்னைக்கு கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 840 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து மேற்கு -தென்மேற்காக நகர்ந்து, 15ஆம் தேதி வலுவிழந்து, முற்பகலில் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை முதல் கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும், அலை ஒரு மீட்டருக்கும் அதிகமாக மேலே எழும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்