மனைவியை கொன்று கழிவுநீர் தொட்டியில் போட்ட கணவன்
மகனுடன் தலைமறைவான கணவனுக்கு போலீசார் வலை
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த சுந்தரி, அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஏற்கனவே திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உறவினர்கள் இரண்டாவதாக திருமணம் முடித்து வைத்தனர். இந்நிலையில் சுந்தரி தினமும் இரவுப் பணிக்கு மட்டுமே செல்வதால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த, செல்வம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று, தகராறு முற்றியதால், ஆத்திரம் அடைந்த செல்வம், சுந்தரியை, அடித்து கொலை செய்து வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் சடலத்தை போட்டுள்ளார். பின்பு, சுந்தரியின் சகோதரருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்து, 5 வயது மகனுடன் தப்பியோடிவிட்டார்.