ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா
சத்தியமங்கலம் அருகே கோயில் திருவிழாவின் போது ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து நான்காவது நாள் சாணியடிக்கும் திருவிழா இக்கோயிலில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா பூஜைகளுடன் தொடங்கியது. இதற்காக ஊரில் உள்ள பசு மாட்டின் சாணங்கள் சேகரிக்கப்பட்டது. முன்னதாக சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் ஒருவரை அமரவைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் கருவறையில் இருந்த சுவாமிக்கு பூஜைகளும் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் ஒருவர் மீது ஒருவர் சாணியை அடித்துக் கொண்டனர்.