"மணல் குவாரி வேண்டாம்" - அதிகாரிகளின் காலில் விழுந்த விவசாயி
தஞ்சை மாவட்டம் திருவையாறு விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,
தஞ்சை மாவட்டம் திருவையாறு விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி ஒருவர் அதிகாரிகள் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்தார். மணல் குவாரி அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த கிராம மக்கள், மணல் குவாரி அமைக்க வேண்டாம் என கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது விவசாயி ஒருவர், அதிகாரிகளின் காலில் விழுந்து
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.