விழுப்புரத்தில் 3-வது நாளாக தொடர்ந்த அதிரடி சோதனை
விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.தேவநாதன் தலைமையில் அதிகாரிகள் 4 மணி நேரம் நடத்திய சோதனையில், இந்த பணம் சிக்கியுள்ளது. இதுவரை, விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 88 ஆயிரம் ரூபாயும், திருநாவலூர் காவல்நிலையத்தில் 2 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய், 107 பட்டாசு பெட்டிகள் மற்றும் புதிய துணிமணிகள் சிக்கியது.