தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமாக மீளவிட்டானில் இயங்கி வரும் 160 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமாக மீளவிட்டானில் இயங்கி வரும் 160 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஸ்வர் மற்றும் கிருஷ்ணவள்ளி அமர்வு, இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதில் அளிக்க உத்தர விட்டனர்.