திருப்பூர் : இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனை
திருப்பூர் மாநகரப் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த,இறந்த கோழிகளின் இறைச்சிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகர பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது தனியார் ஒருவருக்கு சொந்தமான குடோனில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நின்றது குறித்து அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். மேலும் குடோனில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஐஸ் பெட்டிகளில் இறந்த கோழிகளின் இறைச்சிகளை, தள்ளு வண்டி மற்றும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குடோனின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், அத்தகைய இறைச்சிகள் எந்த ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது பற்றியும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.