4 லட்சம் வங்கி கடன் பெற்று பள்ளிக்கு கணினி மையம் அமைத்த அரசு ஆசிரியர்

தர்ம‌புரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 4 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தனது பள்ளிக்கு கணினி மையம் அமைத்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-02 10:05 GMT
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ரேகடஅள்ளி அரசு பள்ளி ஆசிரியர் மதன கோபால், தனது பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்த விரும்பியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக மாணவ மாணவிகளுக்கு கணினி குறித்த பயிற்சி அளிக்க நினைத்துள்ளார். பள்ளியில் கனிணி வசதி இல்லாத‌தால், ஆசிரியர் மதன கோபால், வங்கியில் 4 லட்சம் ரூபாய் வீட்டு கடனாக பெற்று, கணினி மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து கணினி மையம் அமைத்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, ஆசிரியர் மதனகோபாலை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்த‌தோடு, கணினி மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவர்கள் மீது கொண்ட அன்பாலும், தனது மனைவியின் ஒத்துழைப்பாலும் இது சாத்தியமானதாக, ஆசிரியர் மதன கோபால் தெரிவித்துள்ளார். வங்கி கடன் பெற்று, மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் மதனகோபாலை மற்றும் அவரது மனைவியை மாணவர்களின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்