ரூ.20 கோடி செலவில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த பணிகளுக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களுக்கு நடைபாதை, குழந்தைகளுக்கு விளையாட தனி இடங்கள், பறவைகளை பார்த்து மகிழ கோபுரங்கள் என பல்வேறு வசதிகளுடன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நன்மங்கலம் காப்புக் காட்டையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வகையில், அனுமதி அளிப்பது குறித்து வனத்துறை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிய பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரு மாநகராட்சியாக மாறிய சென்னையில், மீதமுள்ள ஒரே இயற்கை வளத்தை, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர், அரசு சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.