ராமேஸ்வரம் : இடமாற்றம் செய்யப்பட்ட 5 தீர்த்தங்கள் பயன்பாட்டுக்கு வந்தது
பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக 5 தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பிரகாரங்களில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இந்த நிலையில் பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் ஒன்று முதல் ஆறு தீர்த்தங்களை கோயிலின் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக 5 தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட புதிய ஐந்து தீர்த்தங்களிலும் புனித கலசங்களில் இருந்த நீர் தெளிக்கப்பட்டது. பின் காயத்ரி சாவித்ரி சரஸ்வதி சங்கு சக்கரம் ஆகிய தீர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுடைய பயன்பாட்டிற்கு விடப்பட்டது.