அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பு காலியிடங்கள்...இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய கோரி, அந்த கல்லூரி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய கோரி, அந்த கல்லூரி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு கல்லூரியில் சேர்த்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் மற்றும் காலி இடங்களின் விவரங்களை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.