தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-26 13:22 GMT
* தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக, புதிதாக மரங்களை நடவு செய்யாமல் சுங்க கட்டணம் வசூலிக்க இடைகால தடைவிதிக்க வேண்டும் என, சிவகாசியை சேர்ந்த ஆனந்தமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

* முந்தைய விசாரணையின் போது தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்களை நடவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

* ஆனால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆனந்தமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். 

* இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கினை நவம்பர் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்