ஒரே மாதத்தில் தங்கம் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்வு
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னையில், கடந்த ஒன்றாம் தேதி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, 2 ஆயிரத்து 915 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 126 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 41 ரூபாயாக உள்ளது. அதன்படி, சவரனுக்கு ஆயிரத்து 8 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 41 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.