மகா புஷ்கரம்- கடைசி நாளில் பக்தர்கள் குவிந்தனர்

மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

Update: 2018-10-23 11:15 GMT
மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 144 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா, கடந்த 11ஆம் தேதி  தொடங்கியது. கடந்த 12 நாட்களாக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 143 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். கடைசி நாளான இன்று, மாலையில் நடைபெறும் மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில்,  
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் காலை முதல் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்