டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை இல்லை - ஸ்டாலின்
டெங்கு, பன்றிக் காய்ச்சலால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், தி.மு.க. மருத்துவரணி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்துமாறு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
* சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகள் உள்பட தமிழகம் முழுவதும் 13 பேர் ஒரே வாரத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
* நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
* அதிமுக அரசும், அமைச்சர்களும் காட்டும் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதாகவும், டெங்கு காய்ச்சலை தடுக்க போதிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
* டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், தரமான சிகிச்சை அளிக்கவும் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
* ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட மருத்துவமனை வரை அனைத்திலும் போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
* திமுக மருத்துவ அணி சார்பாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கட்சியினரை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.