பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா : குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது

Update: 2018-10-19 03:25 GMT
துத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஞான மூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக ஏராளமான பக்தர்கள் இங்கு விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.  இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா, கடந்த  10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9வது நாளான நேற்று, முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கலைமகள் திருக்கோலத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி, பலத்த பாதுகாப்புடன்,  சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்