நாமக்கல் வட்டாட்சியர் தொடர்ந்த வழக்கு : லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்த நாமக்கல் வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-10-18 08:23 GMT
மணல் கடத்தல் லாரியை விடுவிக்க லஞ்சம் பெற்றதாகக் கூறி நாமக்கல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை ரத்து செய்து, விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது.  மணல் கடத்தலில் ஈடுபட்ட போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர்களை நீண்ட தூரத்தில் உள்ள இடங்களுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, மணல் கடத்தலில் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு உள்ள தொடர்பு குறித்து விரிவான பதில் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்