தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் : மக்கள் அவதி
ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்களையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.
ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்களையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.
ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளை நாடினர். கூட்டத்தை பயன்படுத்தி சாதாரண ஆம்னி பேருந்துகளில் 50 சதவீதம் கூடுதல் கட்டணமும், குளிர்சாதன பேருந்துகளில் இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.