அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

மாணவர் இடைநிற்றலை தடுக்க கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-14 09:38 GMT
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலையளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாணவர் இடைநிற்றலை தடுக்க கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெவித்துளாளர். அரசு பள்ளிகளில்  ஒவ்வொரு மாணவருக்கும் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு செலவிடும் தொகையை விட அதிகம் என்றும், ஆனாலும் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிக்கு பாடம் படிக்க வருவதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்