அரசு பேருந்தை 45 நிமிடங்கள் வழிமறித்த காட்டு யானைகள்...
நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் அரசு பேருந்தை காட்டுயானைகள் மறித்ததால் பயணிகள் நடுக்காட்டில் தவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் அரசு பேருந்தை காட்டுயானைகள் மறித்ததால் பயணிகள் நடுக்காட்டில் தவித்தனர். மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் சாலை அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து சென்றபோது சாலையின் நடுவே காட்டுயானைகள் நின்று கொண்டிருந்தன. உடனே ஓட்டுநர் பேருந்தை அங்கேயே நிறுத்தினார். வழிவிடாமல் நின்ற காட்டுயானைகள், 45 நிமிடங்களுக்குப் பிறகு, வனப்பகுதிக்குள் சென்றன. பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.