"சென்னைக்கு புதிய பேருந்துகள் இல்லை"
புதிதாக வழங்கப்பட்ட பேருந்துகளில் ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
* சென்னை மாநகர பொக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இது, தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் பேருந்து பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமாகும்.
* 3 ஆயிரத்து 300 பேருந்துகளை கொண்ட சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 70 சதவீத பேருந்துகள், 6 லட்சம் கிலோ மீட்டருக்கும் மேல்ஓடியும், சட்டப்படி நிறுத்தப்படாமல், தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
* கடந்த ஓராண்டில் 250 பேருந்துகள், இயக்கவே தகுதியில்லை என நீக்கப்பட்ட நிலையில், புதிய பேருந்துகள் விரைவில்
வழங்கப்படும் என அரசு கூறிய போதிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட துவக்கி வைக்கப்பட்ட 471 பேருந்துகளில் சென்னைக்கு ஒரே ஒரு பேருந்து தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
* இதுபோல, கடந்த ஜூலை மாதம் 515 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. அதிலும், சென்னைக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு புதிதாக வாங்கப்பட்ட 986 பேருந்துகளில், 320 பேருந்துகள் சேலம், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கபட்டுள்ளன. இது புதிய பேருந்துகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.