தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்

144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் துவங்கியது.

Update: 2018-10-11 06:13 GMT
அருகன்குளம் ஜடாயு படித்துறையில் கணபதி ஹோமத்துடன் புஷ்கரம் பூஜை தொடங்கியது. எட்டெழுத்து பெருமாள், சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக படித்துறைக்கு எடுத்து வரப்பட்டனர். அங்கு தட்சிணாமூர்த்தி வித்யா பீடாதிபதி ஓம்காரனந்தா தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. 

பின்னர் ஜடாயு படித்துறையில், சுவாமிகள் புனித நீராடினர். இதனை தொடர்ந்து, பக்தர்கள் தாமிரபரணியில் நீராடினர். புஷ்கரம் விழாவின் ஒரு பகுதியாக, அருகன்குளம் கோ சாலையில், 54 குண்டங்கள் அமைத்து, உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்துள்ள பண்டிதர்களால் வேள்வி நடத்தப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்