சிலைகள் வைத்திருக்க பெற்ற தொல்லியல் துறை சான்று : ரன்வீர் ஷா நாளை மறுநாள் சமர்ப்பிக்க வேண்டும்
சிலைகள் வைத்திருக்க தொல்லியல் துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றுகளை நாளை மறுநாள் சமர்ப்பிக்க ரன்வீர் ஷா, கிரண் ராவ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் தம்மை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரன்வீர்ஷா மனுதாக்கல் செய்துள்ளார்.
* தீனதயாளனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும், அவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மனுவில் அவர் கூறியுள்ளார்.
தீ* னதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றும் ரன்வீர்ஷா தெரிவித்து உள்ளார். இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து சிலைகளும் தொல்லியல் துறையின் சான்றிதழ் பெற்று வைத்திருப்பதாக ரன்வீர் ஷா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
* இதையடுத்து, சிலைகளை வைத்திருக்க தொல்லியல் துறையிடம் தந்த சான்றிதழ்களை தாக்கல் செய்ய ரன்வீர் ஷா, கிரண் தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.