பனை விதை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி

கோவை வேடப்பட்டி பகுதியில் உள்ள புதுக்குளத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பணை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-10-07 18:40 GMT
கோவை வேடப்பட்டி பகுதியில் உள்ள புதுக்குளத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பணை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் வேலுமணி பனை விதைகளை விதைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்,  ஊரக வளர்ச்சி துறை வனத்துறையுடன் இணைந்து பல்வேறு மரங்களை உற்பத்தி செய்வதாக கூறினார். பனை விதைகளும் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். செங்கல்சூளையில் எரிபொருளாக பனைவிதைகளை பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்