மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை, இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருவதால், கடந்த இரண்டு மாதமாக, பெட்ரோல் டீசல் விலை, தினமும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் டீசல் விலை கணிசமான உயர்வைக் கண்டுள்ளது.சென்னையில் நேற்று 86 ரூபாய் 80 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று 25 காசுகள் உயர்ந்து 87 ரூபாய் 5 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
இதேபோல நேற்று 79 ரூபாய் 8 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், இன்று 32 காசுகள் அதிகரித்து, 79 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால், லாரி உரிமையாளர்கள் 25 சதவீதம் வாடகையை உயர்த்தியுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.