60 ஆண்டுகளுக்கு பின்னர் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே கடம்பூர் கைலாசநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்முறைப்படி நடந்தது.
கும்பகோணம் அருகே கடம்பூர் கைலாசநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்முறைப்படி நடந்தது. கடந்த 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் கும்பாபிசேக விழாவில், தமிழ் முறைப்படி 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் யாகவேள்விகள் நடத்தினர்.
அதனை தொடர்ந்து யாகபூஜைகள் முடிந்து யாக வேள்விகளில் வைக்கப்பட்ட புனிதநீர், சுவாமி அம்பாள் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.