2016 செப். 22 -ல் கண் விழித்தார் ஜெயலலிதா - அப்பல்லோ டாக்டர் வெளியிட்ட தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை - அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் செந்தில் குமார், ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Update: 2018-09-27 16:41 GMT
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை - அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் செந்தில் குமார், ஆஜராகி விளக்கம் அளித்தார். எழிலக வளாகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி அறையில் நடைபெற்ற விசாரணையின்போது, 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஜெயலலிதா கண் விழித்தார் என்று வாக்குமூலம் கொடுத்தார். 

* தனது உடல் நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்குமாறும் அதேநேரம் அச்சப்படும் வகையில் தெரிவிக்க வேண்டாம் என்றும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக இருந்ததாகவும்,ஆனால் சம்பந்தப்பட்டவர்கள், தங்களை அணுகவில்லை என்றும் டாக்டர் செந்தில் குமார் வாக்குமூலம் அளித்தார். இதனிடையே, டாக்டர் செந்தில் குமாரிடம் அக்டோபர் 4 ம் தேதி, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் வழக்கறிஞர் பார்த்தசாரதி, குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்