சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - மாவட்ட ஆட்சியர் ரோகினி

சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறினார்.

Update: 2018-09-27 14:17 GMT
உலக சுற்றுலா தினத்தையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளா​ஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சேலத்தில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரோகினி, சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கூறினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சேலம் மாவட்டத்துக்குள் கொண்டு வருவதை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்