நிலக்கரி போக்குவரத்தில் ரூ.2500 கோடி வரை முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர்.

Update: 2018-09-19 17:08 GMT
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், சில ஆவணங்களை வெளியிட்டார். இந்திய நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வருவதில் இந்த முறைகேடு நடந்ததாக அவர் கூறினார். கடந்த 2001ம் ஆண்டில் வெறும் 5 மாதங்களுக்கு மட்டுமே கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு தற்போது வரை ஆணை நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த நிறுவனம், தமிழக மின் துறையிடம் ரசீது வழங்காமல் கூடுதல் பணத்தை பெறுவதால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஜெயராமன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்