காஞ்சிபுரத்தில் அநாதையாக சுற்றித் திரிந்த அமெரிக்க பெண் மீட்பு

காஞ்சிபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்க பெண்ணை போலீசார் மீட்டனர்.

Update: 2018-09-16 10:33 GMT
காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தினர். அவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மேரி நெல்சன் என்பதும், வேளச்சேரியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விமல் என்பவரை ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டதும்  தெரியவந்தது. கணவன் - மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், மேரி நெல்சனுக்கு போதை பழக்கம் இருந்ததால் விமல் அவரை விட்டுவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த மேரி நெல்சன், வீட்டை விட்டு வெளியேறி சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து, மேரி நெல்சன் அமெரிக்க தூதகரத்தில் ஒப்படைக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்