கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.

Update: 2018-09-16 02:57 GMT
இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் தாலுக்கா அலுவலகம் முன்பு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனிடையே, கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே சலசலப்பு



திண்டுக்கல் குடை பாறைப்பட்டியில் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக  விநாயகர் சிலை எடுத்து செல்லும்போது, சாலையிலேயே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது இளைஞர்கள் சிலர் முழக்கங்கள் எழுப்பியதால், அப்பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கு சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் சமரசம் செய்து மீண்டும் ஊர்வலம் துவங்கி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குளத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல் - பாட்டில் வீச்சு



திருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் மற்றும் பாட்டில் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சமுத்திரம் காலனி பகுதி வழியாக வந்த போது மர்ம நபர்கள் சிலர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்