அறிவிக்கப்படாத மின்வெட்டு - ஸ்டாலின் கண்டனம்

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-11 18:48 GMT
மின்வாரியத்தில் ஊழல், முறைகேடு  காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்திருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தரமற்ற நிலக்கரி வாங்கியதன் மூலம், 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேவைப்படும் மின்சாரத்தில் 3 ஆயிரத்து 260 மெகாவாட் பற்றாக்குறையால் மின் பகிர்மானக் கழகம் தத்தளித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராமரிப்பு என்ற பெயரில், மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்