"தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது" - ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ள 900 அரசு பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 900 அரசு பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் லாலாபேட்டையில் பாமக-வின் 30-ம் ஆண்டு துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது என கூறினார்.