வெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை
ஒரு போக சாகுபடிக்கு செய்த நாற்றங்கால் கருகி, வயல்கள் வெடிக்க தொடங்கி உள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒருபோக சாகுபடியை செய்யலாம் என நாற்றங்கால் விட்டு நடுவு பணியை தொடங்க உள்ளனர். இந்நிலையில் முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருவதால், தற்போது காவிரி ஆறு வறண்டு உள்ளது. கடைமடை பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட குறுவை பயிர் தண்ணீர் இன்றி காய்ந்து, வயல்வெளிகள் வெடித்து காட்சி அளிக்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒருபோக சாகுபடியை நிறைவாக செய்யலாம் என சாகுபடியை தொடங்கி நாற்றுவிடும் முன்பே பயிர் கருகி உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர். முக்கொம்பு கதவணை உடைப்பை அரசு அதிவிரைவாக சரிசெய்து காவிரி மற்றும் வெண்ணாறில் தண்ணீரை உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.