தியாகி லட்சுமண அய்யர் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் சிலையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் சிலையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "எப்படி இருக்கிறீர்கள், செளக்கியமா" என்று தமிழில் பேசி தனது உரையைத் துவக்கினார். மேலும், எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இது நாட்டில் ஊழலை ஒழிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.