காவல்துறை ஐ.ஜி மீதான பாலியல் புகார் - தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ்
காவல்துறை ஐ.ஜி மீதான பாலியல் புகார் , தமிழக காவல்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும், தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக காவல்துறை ஐஜி மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குபதிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும், தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த தகவலை, தந்தி தொலைக்காட்சிக்கு, தொலைபேசி வாயிலாக, தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.