சென்னையில் பெட்ரோல் விலை 81 ரூபாயை தாண்டி விற்பனை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 54 பைசாவாக விற்பனையாகிறது
* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 70 ரூபாய் 11 பைசாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
* இதனால், இறக்குமதியாகும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
* இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசு உயர்ந்து, 81 ரூபாய் பூஜ்ஜியம் ஒன்பது பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது.
* இதேபோல், டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 54 பைசாவாக விற்பனையாகிறது.
* பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான விலை உயர்வை சந்தித்து இருப்பது. வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.