ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

Update: 2018-08-27 10:42 GMT
கடந்த ஆண்டு ஒகி புயலின் போது, கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களில் 177 பேர் மாயமாகினர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, 177 பேரின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், அவர்களில் தகுதிவாய்ந்த 136 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான  ஆணை வழங்கப்பட்டது. அதன் அடையாளமாக, 10 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்