"69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும்" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பாதுகாத்திட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
* 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்தும், ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து வழக்குத் தொடரும் போக்கு அதிகரித்து வருவதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
* ஆகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் தமிழக அரசு நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி வாதிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
* தமிழகத்தின் உயிராதார பிரச்சினை என்பதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எள்ளளவும் இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.