குறைந்தது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை
கடந்தாண்டை போல் நடப்பாண்டும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
* நடப்பு கல்வியாண்டுக்கான, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முதன் முறையாக ஆன்லைனில் நடந்தது.
* இந்த கலந்தாய்வு குறித்த புள்ளி விவரங்களை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
* அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 72 ஆயிரத்து 648 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
* இதனால், 97 ஆயிரத்து 980 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* எனினும், வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள துணை கலந்தாய்வில், கூடுதலாக சில ஆயிரம் பேர் சேருவார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.
* கால தாமதமாக கலந்தாய்வை துவங்கியது, ஆன்லைன் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் திணறல், பொறியியல் படித்தாலும் வேலை கிடைக்காத சூழல் உள்ளிட்ட காரணங்களால், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.