மேட்டூர் அணையில் இருந்து 1.65 கனஅடிநீர் வெளியேற்றம்
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதையடுத்து கபினி, கேஎஸ்ஆர் ஆணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 65 கனஅடியாக உள்ளது.
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதையடுத்து கபினி, கேஎஸ்ஆர் ஆணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 65 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து அணைக்கு வரும் மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.