ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி வேன்கள் ஓடவில்லை.

Update: 2018-08-07 08:27 GMT
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி வேன்கள் ஓடவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர். வழக்கமாக, கும்பகோணம் நீதிமன்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இன்று போராட்டம் காரணமாக அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - டெம்போ, ஆட்டோ, வேன்கள் இயங்காததால் அவதி



மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக, புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. குறைந்த அளவிலான தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகளில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்