மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்

கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில், விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் புனிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

Update: 2018-08-05 06:46 GMT
கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்த  மாணவிகள் மற்றும் பெண்களை தவறாக வழிநடத்தியதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து  வார்டன் புனிதா நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்த போது , விடுதி உரிமையாளருடன் சேர்ந்து மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததை புனிதா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

  2 நாட்கள் விசாரணையை முடித்துக்கொண்டு கோவை நீதிமன்றத்தில் புனிதாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிபதி முன்பு தான் செய்த குற்றத்தை புனிதா ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புனிதா மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்