நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரணை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரகுபதி கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Update: 2018-08-03 17:29 GMT
முந்தைய திமுக ஆட்சியில், சென்னை - அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர்தோட்ட வளாகத்தில்  புதிய தலைமை செயலகம்கட்டியதில்முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக 2012 -ல் நீதிபதி ரகுபதி கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனை எதிர்த்தும், தமக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும் திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2015 ம் ஆண்டு ரகுபதி கமிஷன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, உத்தரவு பிறப்பித்திருந்தது. 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ரகுபதி கமிஷனுக்கு, 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது, வீண் செலவு இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதன்படி, இந்த வழக்கை விசாரித்த , நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்  புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டநீதிபதி ரகுபதி கமிஷன்விசாரணையைநிறுத்திவைத்து,தமிழகஅரசுக்குஉத்தரவிட்டார்.விசாரணை கமிஷன் தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆவணங்களை ஆய்வு செய்து புகாரில் முகாந்திரம் இருந்தால், குற்றவழக்கு தொடர அனுமதி அளித்தார். அதேநேரம், விசாரணை கமிஷன்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை உடனடியாக காலி செய்யவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அரசு கட்டிடங்களில் மட்டுமே இனி, விசாரணை கமிஷனின் அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.எஞ்சிய விசாரணை கமிஷன்கள், தங்கள் விசாரணைகளை விரைந்து முடிக்குமாறும், நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.எனவே, ரகுபதி கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, 

Tags:    

மேலும் செய்திகள்